PSV Story Series · Episode 02

ஒரு தண்ணீர் கேன் டெலிவரி பையன்... ஒரு சில்வர் மெடல் வெற்றியாளர்!

The First Athlete I Believed In

Scene 01Opening

ஒரு நாள் எங்க வீட்டுக்கு தண்ணீர் கேன் கொண்டு வர்ற ஒரு பையனைப் பார்த்தேன்.
அவனோட பெயர் ராஜா.

அன்னைக்கு எனக்குத் தெரியாது...
ஒருநாள் அந்தப் பையனை நான் ஒரு District-Level Bodybuilding Competition-க்கு தயார்படுத்தப் போறேன்னு!
அதுவும் அவனுடைய முதல் போட்டியிலேயே Silver Medal வாங்கப் போறான்னு!

Scene 02An Unexpected Meeting

அந்தக் காலகட்டத்துல நான் மேடவாக்கத்துல இருக்கிற Body Magic Gym-ல Workout பண்ணிட்டு இருந்தேன்.
அது ஒரு Underground Gym.

எப்போதும் போல நான் என்னோட Training பண்ணிட்டு இருந்தேன்.
அப்போ திடீர்னு Gym-க்குள்ள ராஜா வந்தான்.

  • "என்னடா ராஜா, இந்தப் பக்கம்?"

அப்படின்னு கேட்டேன்.

  • "இல்லண்ணா, நான் இப்போ Gym Join பண்ணிருக்கேன். அதான் Workout பண்ண வர்றேன்."

அப்படின்னு சொன்னான்.
அப்போதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

Scene 03Recognising Potential

கொஞ்ச நாள் அவன் Workout பண்ணுறதை கவனிச்சுட்டு இருந்தேன்.
அவனுடைய Physique நல்லா இருந்தது.
அவன்கிட்ட ஒரு Potential இருக்கு அப்படின்னு எனக்குத் தோணுச்சு.

அப்போ அவன்கிட்ட சொன்னேன்:

  • "டேய் ராஜா, உன்னோட Physique நல்லா இருக்கு. நீ கொஞ்சம் Serious-ஆ முயற்சி பண்ணினா Competition பண்ணலாம். நான் உனக்கு Guidance பண்றேன்."

ஆனா அவனுக்கு Confidence இல்லை.

  • "என்னால முடியுமான்னு தெரியலண்ணா..."

அப்படின்னு தயங்கினான்.
ஆனா எனக்கு அவன்மேல நம்பிக்கை இருந்தது.

  • "உன்னால முடியும் டா. நீ முயற்சி பண்ணு. நான் உனக்கு Guide பண்றேன்."

அப்படின்னு Encourage பண்ணினேன்.

Raja, front double biceps pose during his preparation
Raja during his preparation: front double biceps.
Raja, back double biceps pose during his preparation
Back double biceps.

Scene 04Learning to Coach

உண்மையைச் சொல்லணும்னா, அப்போ எனக்கே Competition Preparation-ல பெரிய அனுபவம் கிடையாது.

2007-ல் நானும் ஒரு Bodybuilding Competition-ல கலந்துகிட்டு Ninth Place வந்திருந்தேன்.
ஆனா இன்னொருத்தரை Competition-க்கு தயார்படுத்துறது வேற விஷயம்.

அதனால நான் நிறைய படிக்க ஆரம்பிச்சேன்.
Competition Preparation பத்தி தெரிஞ்சுக்கிட்டேன்.
அனுபவம் உள்ளவங்ககிட்ட போய் கேட்டேன்.
என்னால முடிஞ்ச அளவுக்கு விஷயங்களைக் கத்துக்கிட்டு, ராஜாவுக்கு Training கொடுத்தேன்.

ஏன்னா, நான் அவனுக்கு ஒரு வாக்கு கொடுத்திருந்தேன்.
அந்த வாக்கைக் காப்பாத்தணும்னு நினைச்சேன்.

Scene 05The District-Level Competition · 2012

கொஞ்சம் கொஞ்சமா ராஜாவும் Competition-க்கு தயாரானான்.

அந்த நாள் வந்தது.
ராஜாவோட முதல் District-Level Bodybuilding Competition!

அவன் Stage-ல நிக்கிறதைப் பார்க்கும்போது எனக்கும் ஒரு தனி சந்தோஷம்.

Result அறிவிக்கிறாங்க...
அந்த நிமிஷம் எனக்கே ஆச்சரியம்!

ராஜாவுக்கு Silver Medal கிடைச்சது!
முதல் Competition-லேயே Silver Medal!

Prize presentation on stage at a district-level bodybuilding competition
Prize presentation at the Kanchi district-level bodybuilding competition, 2012.

அவனுக்கும் ரொம்ப சந்தோஷம்.
என்கிட்ட வந்து நன்றி சொன்னான்.
அந்த நிமிஷம் என்னோட ஆரம்பகால Coaching Journey-ல மறக்க முடியாத அனுபவமா மாறிடுச்சு.

Scene 06The First Recognition

அந்த Gym Owner கூட என்னைப் பாராட்டினார்.

  • "என்னப்பா, நீ பசங்களை Competition-க்கு தயார்படுத்துற அளவுக்கு நல்லா பண்ணுறியே!"

அப்படின்னு பாராட்டினார்.

அப்போதான் எனக்கு இன்னொரு விஷயம் புரிஞ்சது.
ஒருத்தருக்கு Training கொடுக்கிறது மட்டும் இல்ல...
அவருக்குள்ள இருக்கிற Potential-ஐ கண்டுபிடிச்சு, அதை ஒரு Achievement-ஆ மாற்றுறதுலயும் ஒரு பெரிய சந்தோஷம் இருக்கு.

Scene 07What I Learned

இந்த அனுபவம் எனக்கு ஒரு பெரிய பாடம்.
அப்போ என்கிட்ட நிறைய வருட Competition Coaching Experience கிடையாது.

ஆனா என்கிட்ட இருந்தது ஒரு ஆர்வம்.

  • ஒருத்தருக்காகக் கற்றுக்கொள்ளணும்னு நினைக்கிற மனசு.
  • அவரால் முடியும் என்று நம்பிக்கை கொடுக்கிற எண்ணம்.
  • அவரை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வரணும்னு இருந்த விருப்பம்.

Scene 08Closing

ராஜா என்னோட வாழ்க்கையில் ஒரு முக்கியமான மனிதர்.
ஏன்னா, அவர் என்னோட முதல் Competition Athlete-களில் ஒரு முக்கியமான அனுபவம்.

அன்னைக்கு நான் அவர்கிட்ட Potential-ஐப் பார்த்தேன்.
அவர் என்மேல நம்பிக்கை வச்சார்.
அந்த நம்பிக்கை ஒரு Silver Medal-ஆ மாறுச்சு.

இன்னைக்கு நான் நம்புற ஒரு விஷயம்...

ஒரு நல்ல Trainer என்பவர் Exercise மட்டும் சொல்லிக் கொடுக்கிறவர் கிடையாது.
ஒருத்தருக்குள்ள இருக்கிற திறமையை அடையாளம் கண்டு, அவரால் முடியும் என்று நம்பிக்கை கொடுத்து, அவருடைய இலக்கை அடைய வழிகாட்டுகிறவரும் கூட!

இதுதான் என்னுடைய ஆரம்பகால Coaching Journey-யின் மறக்க முடியாத வெற்றிகளில் ஒன்று.

Raja smiling backstage at a bodybuilding competition
Raja, backstage.
Two athletes backstage at a bodybuilding competition
Backstage at a competition.
PSV Story SeriesEvery Athlete Has a JourneyEvery Achievement Has a Story.— Coach Parthiban Selvam · PSV Lifestyle Systems™

See the athlete in you?

Talk to Parthiban about physique and contest-prep coaching, or start with a free assessment.